திண்டுக்கல்: வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிலாத்து என்ற கிராமத்தில் எவ்வித குற்றச்சம்பவங்களும், சூதாட்டங்களும், பந்தயங்களும் நடைபெறாமல் தடுக்கவும் மக்களுக்காக எந்த நேரத்திலும் சிறப்பாக செயல்படவும் தொடர்ந்து காலம் நேரம் பார்க்காமல் பணியாற்றி வரும் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் சைக்கிளில் ரோந்து சென்று ஒவ்வொரு வீதி வாரியாக சுற்றி வந்தார். நேரடியாக பொதுமக்களிடம் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டார். ஆய்வாளரின் இந்த செயல் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா