திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில்,மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி முருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் வேலுமணி,ராஜகுரு, வடிவேல் ஆகியோர் அய்யலூர் தங்கம்மாபட்டி செக்போஸ்ட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த ரெட்டியார் சத்திரம் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த சிவன், அஜித், செம்மடையப்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார், தினேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஏழரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா