திண்டுக்கல்: திண்டுக்கல், தாடிக்கொம்பு அருகே அகரம், பூஞ்சோலை பகுதியில் செல்வம் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ்(29). ராஜ் (எ) ராசு(24). கணேசன்(38). ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி செல்வம் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றதாக செல்வம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா