திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கோபி(34). என்பவர் திண்டுக்கல் AMC-ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த குள்ளனம்பட்டியை சேர்ந்த ராஜ் மகன் ராஜபாண்டி(30). சவேரியார் பாளையத்தை சேர்ந்த டேவிட் ராஜ் மகன் ஆரோக்கியராஜ்(22). ஆகிய இருவரும் கோபி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி செல்போன் பறித்து சென்றதாக கோபி அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ராஜபாண்டி, ஆரோக்கியராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா