கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய பகுதியில் ஸ்ரீதர் என்பவர் ஓட்டுனராக வேலை செய்து வருவதாகவும் (01.10.2024) ஆம் தேதி இரவு சுமார் 11.30 மணிக்கு வேலையை முடித்துவிட்டு தான் தங்கியிருக்கும் அறைக்கு ஓசூர் தனுஷ்க் ஜுவல்லரியின் பின்புறம் நடந்து சென்று கொண்டிருந்தபோது தனக்கு பின்னால் ஆட்டோவில் வந்த நான்கு நபர்கள் தன்னை பார்த்து நாங்கள் நான்கு பேரும் குற்றவாளிகள் அதனால் சட்டைப் பையில் வைத்துள்ள பணத்தை எடு என்று மிரட்டியதாகவும் பணம் இல்லை செல்போன் தான் உள்ளது என பயந்து கொடுத்ததாகவும் அதை வாங்கிக்கொண்டு நான்கு பேரும் தன்னுடைய சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளை சோதனை செய்துவிட்டு பணம் எதுவும் இல்லாததால் செல்போனை எடுத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் ஸ்ரீதர் (02.10.2024) ஆம் தேதி அட்கோ காவல் நிலைய ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து செல்போன் பறித்து சென்ற நான்கு நபர்களில் மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்