கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் பிரியங்கா என்பவர் மூக்கண்டபள்ளியில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் (30.07.2024) ஆம் தேதி கம்பெனியில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு மதியம் சுமார் 2.30 மணிக்கு ஓசூர் பேருந்து நிலையத்தில் அத்திப்பள்ளி பஸ் நிற்கும் இடத்தில் உள்ள கழிவறையின் அருகே நின்று போன் பேசிக் கொண்டிருந்தபோது குற்றவாளி கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்து சென்ற போது சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் குற்றவாளியை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க போலீசார் சம்பவயிடம் வந்து குற்றவாளியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர், பிரியங்கா ஓசூர் டவுன் காவல் நிலைய ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து செல்போன் பறித்து சென்ற நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்