கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள சாமல்பள்ளம் என்ற தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தாபா ஓட்டலில் தூங்கிக் கொண்டு இருந்த நபரிடம் செல்போன் திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அந்த இளைஞர் சாமல்பள்ளம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்ட வந்தாக கூறப்படுகிறது. அவனை அடையாளம் கண்ட பொதுமக்கள் அருகே இருந்த மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த இளைஞர் கிருஷ்ணகிரி நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்த குணால் (23). நள்ளிரவு ஓசூர் அடுத்த மூக்கொண்டப்பள்ளி பகுதியில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட இருந்ததை டூவீலரை திருடிக் கொண்டு வந்தது தெரியவந்தது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்