கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குமரன் என்பவர் சங்கீதா மொபைல் ஏரியா மேனேஜராக வேலை செய்து வருவதாகவும், கிருஷ்ணகிரி To பெங்களூர் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி கிளையில் குற்றவாளி மேனேஜராக வேலை செய்து அவருடன் இரண்டு நபர்கள் சேல்ஸ்மேன் ஆக வேலை செய்து வந்ததாகவும் கிருஷ்ணகிரி சங்கீதா கிளையில் இருப்பில் இருந்த செல்போன்கள் மற்றும் உபகரணங்கள் குறைவாக இருப்பதாக தெரிய வந்ததால் ஆடிட்டர் மூலம் ஆடிட்டிங் செய்தபோது 22 செல்போன்கள் இருப்பில் குறைவாக இருப்பது தெரிய வந்ததாகவும் மற்றும் சில செல்போன் உபகரணங்கள் இல்லாமல் இருப்பது தெரிய வந்ததாகவும் மேற்படி குற்றவாளி செல்போன் மற்றும் உபகரணங்களை வெளியே யாருக்கோ எவ்வித பில்லும் போடாமல் கொடுத்துள்ளார். என்றும் தெரியவந்து குற்றவாளியை விசாரித்த போது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் தலைமை அலுவலகம் உத்தரவின் பேரில் குமார் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.