கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி SLV நகரில் சக்திகுமார் என்பவர் குடியிருந்து கொண்டு ஓசூர் அசோக் லேலண்டில் வேலை செய்து வருவதாகவும் (05.05.2025) ஆம் தேதி மாலை சுமார் 5.00 மணிக்கு ஜூஜூவாடி To பேகேப்பள்ளி பெத்தேல் ஸ்கூல் அருகில் சக்திகுமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது பார்த்தால் அடையாளம் காணக்கூடிய நபர் ஒருவர் செய்கை காட்டி வண்டியை நிறுத்தியதாகவும் சக்திகுமார் இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது குற்றவாளி பலவந்தப்படுத்தி பாக்கெட்டில் இருந்த செல்போன், இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டதாக சிப்காட் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை செய்து செல்போன், இருசக்கர வாகனம் பறித்து சென்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து செல்போன், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.