கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் ரிங் ரோடு சாந்தி நகர் பிளாட்டில் ராஜேஷ் என்பவர் இன்ஸ்டாகார்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் கூரியர் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து வருவதாகவும், (30.06.2025) ஆம் தேதி மதியம் சுமார் 2.00 மணியளவில் எதிரி நிறுவனத்திற்கு வந்த எட்டு பார்சல் பைகளில் இருந்து 10 செல்போன்கள், 1 ப்ளூடூத், 2 கேமரா ஆகிய பொருட்களை திருடி எடுத்துச் சென்று விட்டார் என்று (16.07.2025) ஆம் தேதி காலை சுமார் 10.00 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து திருடிய நபரை கைது செய்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.