நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இ.சி.ஆர் ரோடு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சந்திரசேகரன் (55). த /பெ பஞ்சபகேசன், பாலையூர், என்ற நபர் இரவு 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர் தன்னை வழிமறித்து மொபைல் போன் மற்றும் ரூபாய் 5000 பணத்தையும் பறித்துக் கொண்டு சென்றதாக சந்திரசேகரன் நாகூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி குற்ற சம்பவத்தை ஈடுபட்டது 1)கார்த்திகேயன் (30). த /பெ முனியாண்டி voc தெரு வெளிப்பாளையம் 2) அபிலாஷ்(41). த/பெ அவிநாசி, தாமரைக் குளம் தென்கரை, நாகப்பட்டினம், என்பது தெரியவந்தது.
மேற்படி குற்றவாளிகள் இருவரும் மீதும் நாகூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாகை குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில் (26.03.2024) குற்றவாளிகள் ஆன இரண்டு நபருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ/- 5500 அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஒரு மாத கால அளவிற்கு நீட்டிக்க கூடிய சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் மூலம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் சிறப்புடன்செயல்பட்ட நாகூர் காவல் நிலைய அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்கள் பாராட்டினார்கள்