கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது. அந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS* அவர்கள் உத்தரவின்படி அவருடைய நேரடி மேற்பார்வையில் இயங்கும் சைபர் செல் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் நடவடிக்கையாக தற்போது சுமார் *60,00,000/- (அறுபது இலட்சம் ரூபாய்) மதிப்புள்ள 303* செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உரிய நபர்களிடம் இன்று ஒப்படைத்தார்.