கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் (13.10.2024) ஆம் தேதி ஆயுத பூஜைக்காக சிறப்பு பேருந்து இயக்க வேண்டி அரசு பேருந்தில் முருகன் என்பவர் கண்டக்டராக வேலை செய்து வந்ததாகவும் இரவு சுமார் 01.00 மணிக்கு ஓசூர் பேருந்து நிலையத்தில் சென்னை பஸ் நிற்கும் இடத்தில் பேருந்து நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்க வேண்டி தனது சட்டையை கழட்டி பேருந்து நடத்துனர் சீட்டின் பின்புறம் மாட்டிவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது அதிகாலை சுமார் 03.00 மணிக்கு எழுந்து தனது சட்டையை பார்க்கும் போது தன் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை குற்றவாளி திருட முயற்சி செய்த போது பிடித்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து குற்றவாளியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். முருகன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்து புகாரின் பேரில் வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்