கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிவசங்கர் என்பவர் சின்ன எலசகிரி கிராமத்தில் குடியிருந்து கொண்டு கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் (16.10.2025) ஆம் தேதி ஓசூர் செல்ல வேண்டி மதியம் சுமார் 2.40 மணிக்கு தர்கா முத்துமாரியம்மன் கோயில் பஸ் நிறுத்தத்தில் அரசு பேருந்து ஏறி சென்றபோது பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் காணவில்லை எனவும் யாரோ திருடிவிட்டார் என (23.11.2025) ஆம் தேதி சிவசங்கர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து செல்போனை திருடி சென்ற இரண்டு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.















