திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவி (20). வயது இவர் தனது வீட்டு கழிப்பறையில் குளித்துக் கொண்டிருந்தபோது திண்டுக்கல் பாறைப்பட்டி அந்தோணியார் தெரு பகுதியை சேர்ந்த மெக்கானிக் முகமதுயூசுப்(19). என்ற வாலிபர் ஆபாசமாக வீடியோ எடுத்தார். அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோர்களிடம் தெரிவிக்க அவர்கள் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் வீட்டில் பதுங்கி இருந்த முகமதுயூசுப்பை, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா