மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்தவர் முத்துராமன்(வயது 35). இவருடைய மனைவி சௌவுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துராமன் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவர் செல்போனில், அடிக்கடி விளையாடுவது வழக்கம். இதனை சௌவுந்தர்யா கண்டித்து வந்துள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் முத்துராமன் செல்போனில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது சௌவுந்தரி கணவரை திட்டியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த முத்துராமன், சௌவுந்தரியின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில், அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால், தனது மனைவி இறந்து விட்டதாக நினைத்து முத்துராமன், மனைவியை கொன்ற விட்டோமே என, எண்ணி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டுக் கொண்டார்.
இதற்கிடையே சிறிது நேரத்தில் சௌவுந்தரி மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்தார்.
அப்போது, வீட்டில் உள்ள அறையில் கணவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். மேலும், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முத்துராமனை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே முத்துராமன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, திருமங்கலம் டவுன்போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்துவிட்டதாக கருதி டாஸ்மாக் பணியாளர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்
தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி