திருநெல்வேலி: திருநெல்வேலி சரகத்திற்கு உள்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி ,கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இதுவரை 4,740 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். திருநெல்வேலி சரகத்தில் இந்த ஆண்டு இதுவரை 379 போ் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி சரகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சுமார் 2,440 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி சரகத்தில் விநாயகா் சிலை ஊா்வலம் மற்றும் விநாயகா் சிலை கரைப்பதற்கு சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.
அப்போது, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் N.சிலம்பரசன்,இ.கா.ப., (திருநெல்வேலி) சீனிவாசன், (தென்காசி) சுந்தரவதனம், இ.கா.ப., (நாகர்கோவில்) ஆல்பர்ட் ஜான்,இ.கா.ப., (தூத்துக்குடி) ஆகியோா் உடனிருந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்