திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பா. மூர்த்தி, இ.கா.பா., அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, திருநெல்வேலி காவல் சரகத்தில் 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் குற்ற நிகழ்வுகள் குறைந்துள்ளன. கொலைகள் (3), ஆதாயக் கொலைகள் (83), கூட்டுக் கொள்ளை வழக்குகள் (40), கொள்ளை வழக்குகள் (18), கொலை முயற்சி வழக்குகள் (30), கொடுங்காய வழக்குகள் (30), சிறுகாய வழக்குகள் (14), அரசு அலுவலா்கள் மீதான தாக்குதல் (4) ஆகியவை குறைந்துள்ளன.
குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் 477 போ் கைது செய்யப்பட்டனா். கொலை வழக்கில் 52 பேருக்கும், போக்சோ வழக்கில் 61 பேருக்கும் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 316 கிலோ கஞ்சாவும், 14 ஆயிரத்து 331 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றத்தடுப்புக்காக 7731 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் 268 கல்லூரிகளிலும் போதை தடுப்பு விழிப்புணா்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தொடா்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு நற்சான்றிதழ்களை காவல்துறை துணைத் தலைவர் வழங்கினாா். பேட்டியின்போது திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர்கள் N. சிலம்பரசன், (திருநெல்வேலி), அரவிந்தன் (தென்காசி), ஸ்டாலின் (கன்னியாகுமரி), ஆல்பா்ட் ஜான் (தூத்துக்குடி) ஆகியோா் உடன் இருந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்