தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த மகாராஜன் மகன் கருப்பசாமி (23). மற்றும் சிப்காட் காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தூத்துக்குடி கோமஸ்புரம் பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் ஜேசுராஜா (30). ஆகிய இருவரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் (04.10.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.