திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை கருப்பணசாமி கோவில் அருகே கடந்த வருடம் சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு வழக்கில் திண்டுக்கல் மேற்கு மீனாட்சியநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தில்லை ராஜா (எ) அரவிந்த் (25), என்பவரை சாணார்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.தங்க முனியசாமி அவர்கள் நீதிமன்ற முதல்நிலை காவலர் திருமதி.தங்கசெல்வி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.ராஜேந்திர பார்த்திபன் அவர்களின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி தில்லை ராஜா (எ) அரவிந்த் என்பவருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா