திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில், நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி. துர்காதேவி மேற்பார்வையில் குஜிலியம்பாறை ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த குமரேசன் மகன் மணிகண்டன்(24). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து தங்க நகையை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி