கரூர் : கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்தவர் சரசு பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் பைக்கில் பூக்கடைக்கு வந்து பூ வாங்குவதுபோல் நடித்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த மூன்று பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
இந்நிகழ்வினால் அச்சப்பட்டு மூதாட்டி சத்தம் போட்டதில் செயின் பறிக்க முயன்ற நபர்கள் தான் வைத்திருந்த செல்போனை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு சென்று தலைமறைவாகினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு இரண்டு பெண்களையும் மற்றும் ஒரு ஆண் நபரைகள் உட்பட
மூன்று பேரையும் வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.