மதுரை : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்துமதி மணப்பாறை பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கேரளா மாநிலத்திலிருந்து திருச்சி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 25ஆம் தேதி சாத்தூரில் இருந்து வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது ரயில் மதுரை ரயில் நிலையம் நடைமேடைக்கு வந்தபோது, மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ,
இந்துமதி கழுத்தில் இருந்த இரண்டு பவன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பிச் சென்றார். இது குறித்து, மதுரை ரயில்வே போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆய்வாளர் ஜெயபிரதா தலைமையில், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், செயின் பறிப்பில் ஈடுபட்டது மதுரையைச் சேர்ந்த சையது செரிப்(24). என்பது தெரிய வந்தது. எனவே, அவரை கைது செய்து நீதிபதி உத்தரவின் பேரில், மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி