திண்டுக்கல் : திண்டுக்கல்லில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி,நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்டு,தலைமை காவலர்கள், ராதாகிருஷ்ணன்,முகம்மது அலி,விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து பல்வேறு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் அவர் மதுரை நரிமேட்டைச் சேர்ந்த சூர்யா, கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த வைரமணி என்பது தெரியவந்தது. இதையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான வைரமணியை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா