திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் கடந்த 10-ம் தேதி தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த ஆண்டிவேல் மனைவி பாண்டியம்மாள்(43). என்பவரிடம் மர்ம நபர்கள் கழுத்தில் கத்தி அரிவாள் வைத்து கொலை மிரட்டல் விடுத்து 14 கிராம் செயின் தோடு கொள்ளையடித்து சென்றது தொடர்பாக வேடசந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட S.P. பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் DSP. பவித்ரா மேற்பார்வையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன் ஜெயலட்சுமி மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட வேடசந்தூர் பெருமாள் கவுண்டன்பட்டி சேர்ந்த முருகானந்தம் மகன் மதுமோகன்(28). எரியோடு குறுக்களையான் பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் சரவணகுமார்(எ) ஜெமினி(28). தாண்டிக்கு பாச்சலூரை சேர்ந்த சத்தியன் மகன் வினோத்குமார்(32). தாண்டிக்குடி பாச்சலூர் சேர்ந்த முனியப்பன் மகன் தங்கப்பாண்டி(32).நிலக்கோட்டையை சேர்ந்த மணி மகன் ஈஸ்வரன்(22). ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்து சென்ற நகைகளையும் கொள்ளையடிக்க பயன்படுத்திய சுசுகி ஷிப்ட் காரையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா