திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராஜா(41). இவர் திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோடு பகுதியில் விசேஷத்திற்காக வந்திருந்தபோது இருசக்கர வாகனத்தை(Scooty) அருகே நிறுத்தி இருந்தார். மர்ம நபர் ஸ்கூட்டியின் இருக்கையை உடைத்து 1 பவுன் தங்கச் செயினை திருடி சென்றார். இது குறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் பாறைமேட்டு தெரு பகுதியை சேர்ந்த தண்டபாணி(31). என்பவரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா