திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள சாலைப்புதூர் குளம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து சென்றனர் . அப்போது, அங்குள்ள குளத்தில் பொக்லைன் மூலம் டிராக்டா்களில் சிலர் செம்மண் கடத்திக் கொண்டிருந்தனர் . இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செம்மண் கடத்தலில் ஈடுபட்டது மாவடி நெருஞ்சிவிளையைச் சேர்ந்த ராஜ்குமார் (48). திருக்குறுங்குடி அருகேயுள்ள ராஜபுதூரை சேர்ந்த ஜெயக்குமார் என்ற பலவேசமுத்து (22). ஆலங்குளத்தை சேர்ந்த பாஸ்கர் (21). பேட்டை அத்திமேடு பகுதியைச் சேர்ந்த காளிபாண்டி (42). வீரவநல்லூர் களத்துமேட்டு தெருவை சேர்ந்த சக்திராஜா ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் காவல் உதவி ஆய்வாளர் சந்திரகுமார் கைது செய்து அவா்களிடமிருந்து ஜேசிபி மற்றும் 4 டிராக்டர்களை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்