தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் முன்பு தகடூர் என்று அழைக்கப்பட்டு வந்தது இந்த மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின் போது மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய போர் கருவிகள்
போர் வாள்கள் செப்புக் காசுகள் புத்தர் சிலைகள் புலிகள் என ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு தர்மபுரி அகலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது
இந்த அகழ்வாராய்ச்சி மையத்தில் பள்ளி குழந்தைகள் பொதுமக்கள் வாரத்தில் 5 நாட்கள் சென்று பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது தற்பொழுது கரோனா வைரஸ் பெரும் தொற்றால் மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு தடை விதிப்பினால் மியூசியம் மூடப்பட்டது.
நேற்று மையத்தை ஊழியர் பார்வையிட வந்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது தகவல் அறிந்து அங்கு வந்த தருமபுரி நகர போலீசார் அங்கு சோதனையிட்டபோது
ராஜராஜசோழன் காலத்து முப்பது செப்புக் காசுகளும் திப்பு சுல்தான் காலத்து போர்வாள் இரண்டும் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளில் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தர்மபுரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.