சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘ செல்ப் பேலன்ஸ் ஸ்கூட்டர் ‘ புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் நின்றபடி இரயில்வே காவல்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்த ஸ்கூட்டர் உதவியுடன் 360 கோணத்தில் சுற்றி, சுற்றி பார்க்க முடியும்.
மேலும் இந்த ஸ்கூட்டரில் ஒரு மணி நேரத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது போன்ற பாதுகாப்பு முறை எழும்பூரிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.