சென்னை: பேசின்பாலம் பகுதியில் செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும் மடக்கிப்பிடித்த பெண் காவலருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு. இந்த பெண் காவலரின் துணிவை பாராட்டி சென்னை பெண் மருத்துவர் ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கியது மனிதாபிமானத்தின் உச்சம்.
• பாண்டிபஜார் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய 2 நபர்களை கைது செய்த காவல் குழுவினருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு.
• பெரியமேடு பகுதியில் பணம் மற்றும் செல்போன் திருடிக் கொண்டு தப்பிச்சென்ற நபரை மடக்கிப்பிடித்த காவல் குழுவினருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு.
• சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளை பாராட்டி சன்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
• மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர்: அரசின் அனுமதி இன்றி போலியான அலுவலகம் நடத்தி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சத்திற்கு மேல் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய நபர் கைது.
• முத்தியால்பேட்டை காவல் குழுவினர்: புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் நுழைந்து செல்போன் திருடிய 2 நபர்கள் கைது.
• சிறப்பு தனிப்படை காவல் குழுவினர்: வீட்டில் தங்கநகைகள் கொள்ளையடித்த வழக்கில் நேபாளத்தை சேர்ந்த காவலாளி உட்பட 8 நபர்கள் கைது.
• திரு.வி.க நகர் காவல் குழுவினர்: மூதாட்டியிடம் தங்கச்செயின் பறித்த 2 நபர்கள் கைது.
• குண்டர் சட்டம்: சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில், கடும் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்ட 15 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா