சென்னை : சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின், பன்னாட்டு முனையத்தில், உள்ள கார் நிறுத்தும் கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து ஒரு வாலிபர் விழுந்து இறந்து கிடப்பதாக, விமான நிலைய காவல் துறையினருக்கு, தகவல் கிடைத்தது. உடனே விமான நிலைய காவல் துறையினர் , சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பார்த்த போது, வாலிபர் ஒருவர் முகத்தில் பலத்த காயத்துடன், ரத்தக்காயங்களுடன் கிடந்தார். இதையடுத்து காவல் துறையினர், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.



















