மதுரை: சட்டமன்றத்தேர்தல் – 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் மதுரை மாவட்ட காவல் சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, (29.03.2026) கொடி அணிவகுப்பு ஊர்வலமானது மதுரை மாவட்ட உசிலம்பட்டி உட்கோட்டம், செக்காணூரனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செக்காணூரனி தேவர் சிலை, சோழவந்தான் சாலை, திருமங்கலம் சாலை மற்றும் மதுரை சாலை வழியாக அணிவகுத்து சென்று இறுதியாக செக்காணூரனி காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. இக்கொடி அணிவகுப்பில் , காவல் துணை கண்காணிப்பாளர் ,ஆய்வாளர்கள், ஆளிநர்கள் மற்றும் மத்திய சேம காவல் படையினர் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
















