தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் மத்தியபாகம் தனிப்பிரிவு தலைமைக் காவலர் சுப்பிரமணியன், தலைமைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கம், சாமுவேல், செந்தில்குமார், மாகலிங்கம், முத்துப்பாண்டி மற்றும் திருமணி ராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மார்;க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு குமாரர் தெருவைச் சேர்ந்த 1. அய்யம்பெருமாள் மகன் கண்ணன் (46), திரவியபுரம் 5வது தெருவைச் சேர்ந்த 2. பெரியசாமி மகன் யோகக்குமார் (31), அழகேசபுரம் 1வது தெருவைச் சேர்ந்த 3. கணபதி மகன் நயினார் (41), திரவியபுரம் 4வது தெருவைச் சேர்ந்த 4. சங்கர ராமன் மகன் சுந்தர் மகாலிங்கம் (35), சாரங்கபாணித் தெருவைச் சேர்ந்த 5. ஆறுமுகம் மகன் லெட்சுமணன், முத்தையாபுரத்தைச் சேர்ந்த 6. நடராஜன் மகன் முத்துவேல் (36) மற்றும் திரவியபுரம் 4வது தெருவைச் சேர்ந்த 7. மாரியப்பன் மகன் மந்திரமூர்த்தி (37) ஆகியோர் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை பொருட்படுத்தாமல், கொரோன வைரஸ் பரவும் அபாயத்தை உருவாக்கி, சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மேற்படி தனிப்படையினர் சூதாட்டம் ஆடிய மேற்படி 7 பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட்டத்திற்காக வைத்திருந்த பணம் ரூபாய் 8700/-யும் பறிமுதல் செய்தனர்.