தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வி.சிந்து, அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்து 14 வாகனங்கள் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 1,24,215 /- ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.