திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சித்திக்,அங்கமுத்து மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுமலை பிரிவு அருகே வடிவேல் என்பவருக்கு சொந்தமான சீட்டாட்ட கிளப்பில் சூதாடிய 5-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திண்டுக்கல் முழுவதும் அரசு அனுமதி இல்லாமல் சூதாட்ட சீட்டு கிளப் நடத்தி வருபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தினம்தோறும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனது வைத்தால் மட்டுமே மாவட்டம் முழுவதும் புற்று ஈசல் போல் உருவாகியுள்ள சூதாட்ட கிளப்புகளை மூட முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா