கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குந்துகோட்டை கிராமத்தில் வனசோதனை சாவடி அருகே உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த 5 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ₹ 22,000/- ரூபாய் பணம், சீட்டுக் கட்டுகள் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.