திண்டுக்கல் : எரியோடு அருகே உள்ள புங்கம்பாடியை சேர்ந்த முத்துலட்சுமி. இவருக்கு 4 வயதில் மகன் உள்ளான். முத்துலட்சுமி, கணவன் இறந்து விட்டதால் மகனுடன் அப்பகுதியை சேர்ந்த தனது உறவினரும், பெயிண்டருமான மணிகண்டன் ( 23) என்பவரது வீட்டில் வசித்து வந்தார் கடந்த 17-ந்தேதி மணிகண்டன், அந்த சிறுவனுக்கு சூடு வைத்தார். அப்போது அந்த சிறுவன் வலியால் கதறி அழுதான். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இதுகுறித்து அறிந்த சிறுவனின் தாய் முத்துலட்சுமி, எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.