குமரி: மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சுற்றுலாப் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டது. இதனை கன்னியாகுமரி டி.எஸ்.பி. திரு.ராஜா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி. ஆர்.சரோஜினி, கோட்டாறு மறைமாவட்ட போதை ஒழிப்பு நலப்பணிக்குழுஇயக்குநர் திரு.அருள்பணி. திரு.நெல்சன், சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவன தலைவர் ஜார்ஜ் பிலீஜின்,
தேசிய செயலர் உமா ராஜேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ஜெகன்மாவட்ட செயலர் திரு.ஜினோ நிக்சன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் திரு. செல்வராஜ், சுகாதார அலுவலர் திரு.முருகன், சமூக ஆர்வலர் திரு.ஜெயசிறில், நியூபாரத்அமைப்பின் செயலர் என்.டி.பெருமாள், கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் திரு.ஆவுடையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.