இராமநாதபுரம்: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் இராமநாதபுரம் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் வீதி நாடகம் 2024 துவக்க நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம். புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழிப்புணர்வுப் பிரச்சார வீதி நாடகத்தை இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் சார்பு ஆய்வாளர் திரு. விஷ்ணுவர்த்தன் அவர்கள் தலைமை ஏற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். ஆர்.எஸ்.மங்கலம். செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி பாக்கிய ரோசரி, பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திரு.கருணாகரன் அவர்களும் முன்னிலை வகித்தார்கள். இராமநாதபுரம் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மான திரு. பெர்னாடிட் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.
மேலும் நிகழ்வில் ஆசிரிய பெருமக்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் பேரூந்து நிலையம்,இராமநாதபுரத்தில் பாரதிநகர், இராமநாதபுரம் மத்திய பேருந்து நிலையம், அரண்மனை ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சார்பாக நிலா கலைக்குழுவினர் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் கிராமிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமியக் கலைகள் மூலமாக மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, நீடித்த நிலையான வாழ்வியல் முறைகள், காற்று மாசு தவிர்த்தல் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் துறையின் இராமநாதபுரம் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான திரு. பெர்னாடிட் செய்திருந்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி