திருவள்ளூர் : மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நூறு ஸ்மார்ட் சிட்டியில் ஒன்றாக பொன்னேரி அறிவிக்கப்பட்டது.இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தொடக்கத்தில், சுமார் 5 லட்சம் பேர் வசிக்கும் வகையிலும், அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 80 லட்சம் பேர் வசிக்கும் வகையிலும், பொன்னேரி இருக்கும் என கூறப்படுகிறது.
பொன்னேரி பொருளாதார மண்டலமாக உருவெடுப்பது தொடர்ந்து முன்னேறி வருகிறது. மிக அருகில் உள்ள காட்டுப்பள்ளியில், அதானி, எண்ணூர் காமராஜர் என இரண்டு சர்வதேச சர்வதேச துறைமுகங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இவற்றை சார்ந்து சுமார் 20க்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக நிலையங்கள் இப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன. அடுத்த 5 ஆண்டில் பொன்னேரி பல மடங்கு வளர்ச்சி அடைந்த புதிய சென்னை நகரமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இத்தகைய சிறப்புமிக்க பொன்னேரியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் அவர்கள், பணியில் நியமிக்கப்பட்டதிலிருந்து, திறம்பட செயல்பட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் வெகுவாக குறைத்துள்ளார்.
காவல் பணி மட்டுமல்லாது, மரம் நடுதல் போன்ற பல்வேறு சமுதாய பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன்.
ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்று, பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சி தசரதன் நகரில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் தேசிய கொடியேற்றி, இனிப்பு வழங்கி ராணுவ வீரர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
நேதாஜி மர வங்கி சார்பில் ஊராட்சிக்கு 74 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் பரிமளம் ஜெயா, துணைத் தலைவர் சபிதா பாபு, முன்னாள் ராணுவ வீரர்கள், காவலர்கள், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்