மதுரை: மதுரை மாவட்டம் கப்பலூர் கன்னியாகுமரி பெங்களூர் ஒன்றிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள சுங்க சாவடியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதில், அரசு வாகனங்கள், அவசர கால ஊர்திகள், மாவட்ட நீதிபதி, அரசு உயர் அதிகாரிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசு வாகனங்கள், இலவசமாக செல்லலாம் என அறிவிப்பு பலகையை அமைத்துள்ளது… மேலும், உள்ளூர் வாகனத்திற்கு இலவச அனுமதி கிடையாது என திட்டவட்டமாக சொல்லி விட்டு, தினசரி இங்கு பிரச்சனையாகவே உள்ளது.
இந்த நிலையில், திருமங்கலம் நகராட்சிக்கு சொந்தமான அரசு வாகனம் , மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக திருமங்கலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
கப்பலூர் சுங்கச்சாவடி வரும்பொழுது, சுங்கச்சாவடி ஊழியர்கள் அரசு வாகனத்திற்கு கட்டாயமாக சுங்கக் கட்டணம் செலுத்தியே ஆகவேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.
அரசு அதிகாரிகளோ, இது அரசு வாகனம் எப்படி சுங்கக் கட்டணம் செலுத்த முடியும் என கேட்டுள்ளனர். செலுத்தினால், தான், வாகனம் டோல்கேட்டை விட்டு செல்ல முடியும் என கறாராக கூறி விட்டார்கள்.
பின்னர், அங்கு வந்து அரசு அதிகாரிகள் அரசு வாகனத்துக்கு சுங்க கட்டணம் செலுத்த முடியாது என, சுமார் இருபது நிமிடத்துக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே வாகனத்தை செல்வதற்கு அனுமதி அளித்தார்கள். இதுபோன்ற அடாவடியில், ஈடுபடும், கப்பலூர் சுங்கச்சாவடியை, அகற்ற வேண்டுமென பொதுமக்களும் வாகன ஓட்டுநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.