திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதூர் பகுதியில் மதுரை – நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்நிலையில் வத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (27). என்பவர் தனது கழிவுநீர் வாகனத்தை எடுத்து கொண்டு மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கவரி கட்டணம் கேட்டதாக கூறப்படு கிறது. இதில் நான் உள்ளூர்காரன் என்னிடம் கட்டணம் கேட்கிறாயா? என லோகேஷ்க்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது லோகேஷ் வாக்குவாத செய்த பின் அங்கிருந்து சென்ற நிலையில்
இருசக்கர வாகனத்தில் 7 பேர் கொண்ட கும்பல் சுங்கச்சாவடிக்கு வந்து இருசக்கர வாகனத்தைக் கொண்டு சுங்கச்சாவடியில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் நிறுத்திவிட்டு கும்பலைச் சேர்ந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றனர். இது குறித்து சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதன் பேரில் நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா