திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சுகுளிப்பட்டியில் கடந்த 2014-ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த் (26), என்பவரை கொலை செய்த வழக்கில் அஞ்சுகுளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (30), தீபன்ராஜ் (32),மற்றும் அருண்குமார் (எ) அருண்பாண்டி (30), ஆகியோர் உட்பட 14 நபர்களை சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.தங்க முனியசாமி அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர்.தங்கசெல்வி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசை ராபர்ட் அவர்களின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.100000 அபராத தொகையுடன் தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா