திண்டுக்கல் : திண்டுக்கல் பெரிய பொன்னுமாந்துறை பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி ஜான் கென்னடி (28), சேசுராஜ் (32), ஆகிய 2 பேரும் கடந்த 2016 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி பக்கத்து தோட்டத்தை சேர்ந்த வின்சென்ட் செல்வராஜ் (54), வில்லியம் ரோசாரியோ (35), ஆகியோரை தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாக தாலுகா காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.P.பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில் தாலுகா காவல்துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் அந்தோணிசாமி ஜான் கென்னடி மற்றும் சேசுராஜ் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5000 அபதாரம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா