திண்டுக்கல்: வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (27.01.2015)-ஆம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழிப்பு செய்த குற்றத்திற்காக வீரசின்னம்பட்டியைச் சேர்ந்த சோனையன் (54) என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்சுமதி அவர்கள், நீதிமன்ற முதல்நிலை காவலர் மதுபாலா அவர்கள், மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி அவர்களின், சீரிய முயற்சியால் இன்று (24.07.2023)-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள், குற்றவாளி சோனையன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா