திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பழனி நகர் பகுதியை சேர்ந்த அய்யர் (48), என்பவரை அனைத்து பழனி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, மற்றும் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட S.P.பாஸ்கரன், அறிவுறுத்தலின்படி பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, சிறப்பு சார்பு ஆய்வாளர் கற்பகவல்லி மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள், அய்யருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். போக்சோ வழக்கில் ஒரு வருடத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.