திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2011-ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பெரிய கலையம்புதூர் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி (66), மற்றும் போஸ் (49), ஆகிய இருவரையும் பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு (NDPS) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தென்னரசு அவர்கள், நீதிமன்ற இரண்டாம் நிலை காவலர் திரு.ரங்கநாதன் மற்றும் அரசு வழக்கறிஞர் அவர்களின் சீரிய முயற்சியால் மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளிகள் தண்டபாணி மற்றும் போஸ் ஆகிய இருவருக்கும் தலா ஒரு வருடம் சிறை தண்டனையும், தலா ரூ.10,000/-அபராதமும் அளித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா