தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்தக பணப் பெட்டியில் இருந்து ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர் ஒருவர் கடந்த 6 ஆம் தேதி திருடிச் செல்வதை மருத்துவர் சீனிவாசன் கண்காணிப்பு கேமராவில் பார்த்துள்ளார்.
இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சி.சி.டிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த இளைஞர் குருமலை சுந்தரேஸ்வரபுரம் வடக்குத் தெரு முத்துபாண்டி மகன் மாரிச்செல்வம் என்பதும், அவர் மருந்தகத்தில் பணம் பெட்டியில் இருந்து பணத்தை திருடியதையும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.















