சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் (18). வயது பூர்த்தியடையாத இளஞ்சிறார்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் இரு சக்கர வாகனத்தை வழங்குவதால் அவர்கள் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவதுடன் அவர்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இதை தடுக்கும் பொருட்டு வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதைபோல் TN 63 CW 5215 என்ற இருசக்கர வாகனத்தை வழங்கிய அவர் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீதித்துறை நடுவர் அவர்கள் மேற்குறிப்பிட்ட குற்றத்திற்கு ரூ.26,000/- அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் ஒரு வருட காலத்திற்கு இருசக்கர வாகனத்தின் பதிவை (Registration) நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். மேலும் அபாராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இது போன்று வாகனம் ஓட்ட தகுதியற்ற சிறுவர்களுக்கு வாகனங்கள் வழங்கும் பெற்றோர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199 A வின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு வாகனத்தை கொடுக்காமல் விபத்துக்களை தடுக்க முன்வரவேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி