சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா வலச்சேரிபட்டியைச் சேர்ந்த அடைக்கன் மகன் அருள்குமரன் ஐயப்பன் என்பவர் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது சம்மந்தமாக காவல்துறை விசாரணைக்காக மேற்படி அருள்குமரன் ஐயப்பனை சாக்கோட்டை காவல்நிலைய மு.நி.கா திரு. செல்வராசு அவர்கள் கடந்த (21-12-2023) ம் தேதி விசாரணைக்கு தக்க ஆவணங்களுடன் நேரில் காவல் ஆய்வாளர் அவர்களை சந்திக்குமாறு தொலைபேசியில் கூறியுள்ளார். அதன்பேரில் மேற்படி அருள்குமரன் ஐயப்பன் கடந்த (21-12-2023) ம் தேதி மாலை சுமார் 04.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். விசாரணையில் அவர் கொடுத்த ஆவணமான 1) வாக்காளர் அடையாள அட்டையில் அவரது பெயர் அருண்குமரன் என்றும் 2) ஆதார்கார்டில் அவரது பெயர் அருள்குமரன் ஐயப்பன் என்றும் இருந்துள்ளது. மேற்படி காவலர் தாங்கள் கொடுத்த ஆவணங்கள் இரண்டில் தங்களது பெயர் மாறி மாறி உள்ளது. எனவே உங்களுடைய வேறு அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணம் (ID Proof) ஒன்று தருமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் (22-12-2023)ம் தேதி மாலை சுமார் 05.00 மணிக்கு மேற்படி அருள்குமரன் ஐயப்பனும் வழக்கறிஞர் அணியாமல் வந்த அவரது சித்தப்பா மகனான முத்துராஜா என்பவரும் காவல் நிலையம் ஆஜராகி மேற்படி செல்வராசிடம், எங்களிடம் வேறு ஐடி புரூப் இல்லை. ஆதார்கார்டை வைத்து பாஸ்போர்ட் வெரிபிகேசனை முடிக்குமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு மேற்படி காவலர் செல்வராசு, இது சம்மந்தமாக சாக்கோட்டை காவல் ஆய்வாளர் அவர்களை சந்தித்து விபரம் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வழக்கறிஞர் முத்துராஜா, வேறு புரூப் தரமுடியாது நீங்கள் பாஸ்போர்ட் வெரிப்பிகேசன் முடிக்காவிட்டால் உங்கள் மீது C.M. CELL -ல் பெட்டிசன் போட்டு மெமோ கொடுக்க சொல்லுவேன் என்றும் மேலும்HIGH COURT-ல் வழக்குப் போடுவேன் என்றும் தான் ஒரு அட்வகேட் என்றும் சொல்லியுள்ளார். அப்போது காவல்நிலையம் வந்த சார்பு ஆய்வாளர் சக்திவேல் அவர்களிடம் மேற்படி விபரத்தை கேட்டு அவர்கள் கொடுத்த புரூப்பை பார்த்துவிட்டு இரண்டிலும் பெயர் மாற்றம் இருப்பதால் மற்றொரு புரூப் கொடுங்கள் என்று வழக்கறிஞர் முத்துராஜாவிடமும், அருள்குமரன் ஐயப்பனிடமும் சொல்லியுள்ளார். அதற்கு மேற்படி முத்துராஜா வேறு புரூப் தரமுடியாது இருக்கின்ற புரூப்பை வைத்து ரெக்கமண்ட் பண்ண முடியுமா முடியாதா எனக் கேட்டுள்ளார்.
அப்போது அங்குவந்த சாக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் விபரம் கேட்டறிந்து அவர்களிடம் வேறு ஒரு ஐடி புரூப் கொண்டு வருமாறு சொல்லியுள்ளார். அதற்கு வழக்கறிஞர் முத்துராஜாஆய்வாளரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது சம்மத்தமாக உங்கள் மீது C.M. CELL மற்றும் HIGH COURT கேஸ் போடுவேன் என்று சொல்லி கொண்டே தான் வைத்திருத்த செல்போனில் காவல்நிலையத்தையும் அங்கிருந்த போலீசாரையும் படம் பிடித்துக் கொண்டே விவாதம் செய்துள்ளார். அதற்கு காவல் ஆய்வாளர் தேவையில்லாமல் வீண் பிரச்சனை செய்யவேண்டாம். காவல்நிலையத்தை விட்டு வெளியே போங்கள் என்று சொல்லி அனுப்பியுள்ளார். அருள்குமரன் ஐயப்பனின் பாஸ்போர்ட் விசாரணை முடித்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பாஸ்போர்ட் விசாரணைக்காக அருள்குமரன் ஐயப்பனிடம் ரூபாய். 3000 லஞ்சம் கேட்டதாகவும், தன்னையும், அருள்குமரன் ஐயப்பனையும் அசிங்கமாக பேசி அடித்து, சாதியைச் சொல்லி திட்டி வழக்கறிஞர் தொழிலை கொச்சையாக பேசியதாக முத்துராஜா கொடுத்த புகாரில் சாக்கோட்டை காவல் நிலைய மறு எண். 1276/23, நாள் 26-12-2023 வழங்கி காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு ரவீந்திரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் பத்துக் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெறப்பட்டது. அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் முத்துராஜா கொடுத்த புகாரில் உரிய முகாந்திரம் இல்லை என அவரது மனு விசாரணை முடிக்கப்பட்டு (06.01.2024) ம் தேதி அவருக்கு விசாரணை அறிக்கை (Closure Report) அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் வழக்கறிஞர் முத்துராஜா சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவல் ஆய்வாளர் சாக்கோட்டை ஆகியோர் மீது உரிய விசாரணை மேற்கொள்ள CRL.MP. No.7208/2023 dt. 06.01.2024- CỐT LI மனு தாக்கல் செய்தது தொடர்பாக (31-01-2024) ம் தேதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த (29-01-2024) ம் தேதி சென்னையிலும், (01-02-2024) ம் தேதி மதுரை முத்துராஜா மற்றும் சில வழக்கறிஞர்கள் சாக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சக்தி காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட் ஈடுபட்டனர். முத்துராஜா எழுப்பிய புகாரில் ஆதாரமற்ற பொய்யான தகவல்களைத் தெரிவித்துள்ளா விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி